நாளுக்கு 30 ரூபாய் சம்பாதித்தவர்... இன்று அவர் உருவாக்கிய நிறுவனத்தின் மதிப்பு ரூ 18076 கோடி
குடும்ப சூழல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு, நாளுக்கு 30 ரூபாய் சம்பாதித்தவர் இன்று உருவாக்கியுள்ள நிறுவனத்தின் மதிப்பு ரூ 18076 கோடி.
14 வயதில் இருந்தே
பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த ராஜீந்தர் குப்தா என்பவர் குடும்ப சூழல் காரணமாக பாடசாலை படிப்பையே பாதியில் கைவிட்டவர். 14 வயதில் இருந்தே குடும்பத்திற்காக உழைக்கத் தொடங்கிவர்.
அவர் ஈடுபடாத வேலை இல்லை. மெழுகுவர்த்தி தயாரித்து விற்பது தொடங்கி அந்த வயதில் அவரால் இயன்ற வேலைகள் அனைத்திலும் ஈடுபட்டுள்ளார். ஆனால் நாளுக்கு வெறும் 30 ரூபாய் மட்டுமே அவரால் சம்பாதிக்க முடிந்தது.
பல ஆண்டுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு, அதுவரை சம்பாதித்த பணம் மற்றும் பலரிடமும் கடன் வாங்கி 1985ல் அபிஷேக் இண்டஸ்ட்ரீஸ் என்ற உரத் தொழிற்சாலையை நிறுவினார்.
இந்த நிறுவனத்தில் கிடைத்த லாபத்தை வைத்து 1991ல் Katai Mill என்ற இன்னொரு நிறுவனத்தையும் தொடங்கினார். இதுவே அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
முக்கிய பொறுப்புகளில் இருந்து
அதன் பின்னர் தமது Trident குழும நிறுவனத்தை ஜவுளி, காகிதம் மற்றும் இரசாயனத் துறைகளில் விரிவடையச் செய்தார். அத்துடன் பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசத்தில் உற்பத்தி யூனிட்டுகளை நிறுவினார்.
மேலும் பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் மேற்கொண்டார். அதுவரை கடுமையான உழைப்பை வழங்கி Trident குழும நிறுவனங்களை பெரும் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் வரிசையில் கொண்டுவந்த பின்னர் 2022ல் தமது 64வது வயதில் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகினார்.
இருப்பினும் தாம் முதலில் தொடங்கிய Trident Limited என்ற நிறுவனத்தின் தலைவராக தற்போதும் செயல்பட்டு வருகிறார். Trident Limited நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 18076 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |