Post Office திட்டத்தில் மாதம் ரூ.12,500 முதலீடு செய்து ரூ.40 லட்சம் சம்பாதிக்கலாம்
ரூ.12500 முதலீடு செய்து ரூ.40 லட்சம் பெற வேண்டுமென்றால் தபால் அலுவலக திட்டத்தை தேர்ந்தெடுத்தால் நல்லது.
Post Office திட்டம்
தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் குறைந்த ஆபத்துள்ள வரி இல்லாத முதலீட்டு வருமானத்தை வழங்குகிறது.
இது முதலீட்டாளர்களுக்கு 7.1% வருடாந்திர வரி இல்லாத வட்டியை வழங்குகிறது. PPF-ல் முதலீடு செய்வது 80C-யின் கீழ் வரி விலக்கு அளிக்கக்கூடிய பங்களிப்புடன் சேமிப்பை ஊக்குவிக்கிறது. இந்தத் திட்டத்தின் lock-in காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
ஒருவர் ரூ.500 முதலீட்டில் இதனை தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் PPF திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை மொத்த முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், 15 வருட லாக்-இன் காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து முதலீடு செய்ய விரும்பினால், அதை ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் நீட்டிக்கலாம்.
15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் முதலீடு: ரூ.12,500
மொத்த வைப்புத்தொகை: ரூ.22,50,000
உத்தரவாதமான வருமானம்: ரூ.18,18,209
முதிர்வு தொகை: ரூ.40,68,209
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |