வெறும் ரூ.1,500 மாத சம்பளம் வாங்கிய நபர்.., இன்று ரூ.3 கோடி வாங்குகிறார்: யார் அவர்?
சில்லறை விற்பனை கடையில் வேலை செய்து மாத சம்பளம் ரூ.1500 வாங்கிய நபர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.36 கோடி வருமானம் பெறுகிறார்.
யார் அவர்?
தனது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னேறி வந்தவர் அஷ்ஃபாக் சுனாவாலா. இவர், தனது குடும்ப வறுமையின் காரணமாக தனது பள்ளிப்படிப்பை 10 -ம் வகுப்பிற்கு பிறகு நிறுத்திவிட்டார்.
பின்னர், 2004 -ம் ஆண்டில் விற்பனைக் கடையில் உதவியாளராக சேர்ந்தார். அதன்பிறகு, 10 ஆண்டுகளாக நல்ல வாய்ப்பை பெறுவதற்காக பல வேலைகளுக்கு மாறியுள்ளார்.
கடைசியில் ஆடை மற்றும் தோல் பராமரிப்புக் கடையின் மேலாளர் ஆனார். ஆனால், அவருக்கு இன்னும் உயர்ந்த இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்று எண்ணம் இருந்தது.
அப்போது தான் 2013 -ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட (ride-hailing app) ரைட்-ஹெய்லிங் செயலியின் விளம்பரத்தை பார்த்துள்ளார். அங்கு அவர் பகுதிநேர டிரைவராக சேர்ந்து மலிவான விலையில் சிறிய காரை வாங்கியுள்ளார்.
இவர், இரண்டு வேலைகளையும் சமமாக செய்து வந்துள்ளார். இதனால் இவரது வருமானம் அதிகரித்தது. கடையில் இருந்து ரூ 35,000 மற்றும் ஒரு டிரைவராக மாதம் ரூ .15,000 கிடைத்துள்ளது.
பின்னர், தனது இரண்டாவது காரை வாங்குவதற்கு அவரது சகோதரி உதவியுள்ளார். இதனால், இன்னும் வருமானம் அதிகரித்ததும் 3 கார்களை வாங்க ரூ.10 லட்சத்திற்கு வங்கியில் லோன் பெற விண்ணப்பித்துள்ளார்.
அதன்பிறகு கார்களை வாங்கி சில ஓட்டுநர்களையம் நியமனம் செய்துள்ளார். பின்னர், கார்களுக்காக EMI தொகையை செலுத்திவிட்டு மீதியுள்ள தொகையை முதலீடு செய்துள்ளார்.
இதேபோல, லோன் எடுத்து அதிகமான கார்களை வாங்கி காலப்போக்கில் 400 கார்கள் என்ற இலக்கை எட்டியது. தற்போது வருடத்திற்கு ரூ. 36 கோடி என்ற மாபெரும் இலக்கை அடைந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |