உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா? இவ்வளவு வருமானமா!
உலகளவில் அதிகளவு மக்களால் கொண்டாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் இருக்கிறது.
கிரிக்கெட் வீரர்களில் பலர் அதிகளவு வருமானம் ஈட்டுகிறார்கள். அப்படி அதிகம் சம்பாதிக்கும் டாப் 5 வீரர்கள் குறித்து காண்போம்.
விராட் கோஹ்லி
விராட் கோஹ்லி, அணி நிர்வாகம், திட்டமிடல், பேட்டிங் என அனைத்து விதத்திலும் சிறந்து விளங்குகிறார். 2008 முதல் இந்திய அணியில் விளையாடும் கோஹ்லி தனக்கான இடத்தைப் போராடித் தான் பெற்றார்.
அந்தப் போராட்டத்தின் வெற்றியைத் தான் தற்போது அறுவடை செய்து வருகிறார். டோனி-யை போலவே விளையாட்டில் மட்டும் அல்லாமல் விளம்பரம், வர்த்தகம் எனப் பலவற்றில் சம்பாதித்து வருகிறார் கோஹ்லி.
வருடத்திற்கு 208.56 கோடி ரூபாய் சம்பாதிக்கும் விராட் கோஹ்லி உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் ஆக உள்ளார்.
டோனி
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து மகேந்திர சிங் டோனி 2019லேயே வெளியேறினாலும் மக்கள் மனத்திலிருந்து இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
டோனியின் சாதனைகளும் அவரது குணமும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் கிரிக்கெட் வீரர்களும் வியந்து வருகின்றனர்.
சிஎஸ்கே அணி மூலம் தமிழ்நாட்டு மக்களுடன் எப்போதும் இணைந்திருக்கும் டோனி, விளம்பரம் மற்றும் பல்வேறு வர்த்தகம் மூலம் வருடத்திற்குச் சுமார் 108.28 கோடி ரூபாய் சம்பாதித்து பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ரோஹித் சர்மா
இந்திய அணியில் ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோஹித் சர்மா, அணியில் சிறந்த ஒப்பனர். இந்திய அணியில் 2013 முதல் விளையாடிக்கொண்டு இருக்கும் ரோஹித் சர்மா பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்துள்ளார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா வருடத்திற்கு 74.49 கோடி ரூபாய் சம்பாதித்து டாப் 10 பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து அணியில் ஸ்டார் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வருடத்திற்கு 60 கோடி ரூபாய் வருமானத்துடன் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா
2016ல் இந்திய அணியில் சேர்ந்த ஹர்திக் பாண்டியா, பாஸ்ட் பவுலர் மற்றும் ஆல் ரவுண்டர் தேவையை எளிதாகப் பூர்த்திச் செய்தவர்.
மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே இவரது திறன் வியக்கவைக்கும் அளவிற்கு உயர்ந்தது. பவுலிங், பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் பட்டையைக் கிளப்பும் ஹர்திக் பாண்டியா வருடத்திற்கு 59.59 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.