நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் பூமியின் அச்சு சாய்வு.., இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்தது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பூமியின் அச்சு சாய்வு
இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில், நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் பூமியின் சாய்வு 31.5 அங்குலங்கள் மாறியுள்ளது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால், பூமியின் சுழற்சி மற்றும் அதன் காலநிலை, கடல் மட்ட உயர்வு, நீரின் மறுபகிர்வு ஆகியவற்றிற்கு ஏற்பட்ட விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்கலாம்.
தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் புவி இயற்பியல் ஆய்வு ஒன்றில் ஈடுபட்டனர். அவர்கள் 1993 -ம் ஆண்டு முதல் 2010 -ம் ஆண்டு வரை ஆராய்ச்சி நடத்தினர்.
இவர்களின் ஆய்வு கட்டுரை ‘Geophysical Research Letters’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், "நிலத்தடி நீரை உறிஞ்சுவதன் காரணமாக பூமியின் துருவம் சுமார் 80 செ.மீ கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது.
ஆராய்ச்சி மேற்கொண்ட காலத்தில் இருந்து 2,150 ஜிகாடன்கள் (gigatons) நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் கடல் மட்டமும் 0.24 அங்குலம் உயர்ந்துள்ளது.
இதனால், பூமியின் நிறை விநியோகத்தில் மாற்றம் ஏற்பட்டு அதன் சுழற்சி அச்சு சாய்வதற்கு வழிவகுத்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 4.36 செ.மீ சாய்ந்து (Earth’s tilt) தற்போது 31.5 அங்குலம் சாய்ந்துள்ளது.
கடலுக்கு நிலத்தடி நீர் மீண்டும் சென்றால் துருவ இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால் வானிலையில் உடனடி பாதிப்பு ஏற்படாது.
ஆனால், தொடர்ச்சியாக பாதிப்பு நேர்ந்தால் நீண்ட கால பாதிப்பு ஏற்படலாம். அதாவது, பூமியின் துருவ இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், பருவநிலையில் தாக்கத்தை நிகழ்த்தும்.
இதனால், நீடித்த நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |