பூமி 365 நாட்களில் சூரியனைச் சுற்றி வந்து விடுகிறது என்பதை எப்படி கண்டுபிடித்தனர்?
பழங்காலத்தில் சூரிய ஒளியின் நிழலை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டு வந்தனர்.
எனவே சூரியனின் போக்கு நுணுக்கமாகக் கவனிக்கப்பட்டது.
மேற்கு கிழக்காக விழுந்த நிழலின் அளவை வைத்து மணி கணக்கிடப்பட்டது. அதேவேளை இந்த அளவு மானிகள் பெரிதாக பெரிதாக மணி நேரம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டது.
ஆனால் சூரியக் கதிர் நேராக மேற்கு, கிழக்காக இல்லாமல் சற்று வடக்கு சாய்ந்து சில நாட்களும், தெற்கு நோக்கி சாய்ந்து சில நாட்களும் இருக்கவே சூரியனின் நகர்வு இருப்பதாகக் கணக்கிடப்பட்டு ஒருமுறை வடக்கிலிருந்து தெற்காக நகர்ந்து மீண்டும் ஆரம்பித்த புள்ளியை அடையும் நாட்கள் கணக்கிடப்பட்டு அது ஒரு வருடமாகக் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.