மனிதர்கள் வாழவே தகுதியில்லாத பூமி; அழியும் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் வாழ முடியாத நிலைக்கு பூமி தள்ளப்பட்டு மொத்தமாக பூமி அழியும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அழியும் அபாயத்தில் பூமி
பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இவ்வாறு தெரிவித்துள்ளார்கள். இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்குள் பூமியானது அழிந்துவிட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், அனைத்து உயிரினங்களும் அழிந்து, பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியாக அதிகரித்து விடும் எனவும் வெப்பத்தின் காரணமாகவே இந்நிகழ்வு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
பூமியில் இருந்து கார்பனை வெளியேற்றுவதனால் தான் இந்த அழிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். 66 ஆண்டுகளுக்கு முன் இது நிகழ்ந்திருப்பதாகவும் இதனால் தான் டைனோசர்கள் அழிந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் தங்களது கருத்தை முன்வைத்துள்ளனர்.
பூமியில் இருக்கும் கார்பன் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகரித்து, இதனால் உடல் சூடானது அதிகரிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் இறப்பார்கள். பின் பூமியின் அனைத்து கண்டமும் ஒன்றாக இணைந்து வேறு ஓர் கண்டம் உருவாகும். அந்த கண்டமானது பாங்கேயா அல்டிமா என்று அழைக்கப்படும் என இந்த ஆய்வு குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர் தெரிவித்துள்ளார்.
முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் பூமியானது மாறும். வெப்பத்தின் தாக்கம் தாங்கமுடியாமல் எரிமலைகள் வெடித்து சிதறும். இதனால் பூமியின் ஒரு பகுதி எரிமலையால் மூடப்படும் எனவும் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த செயல் நிகழும் போது அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுடப்படும். இதனால் மக்கள் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு உயிரிழப்பார்கள் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |