பீகாரில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வு!
பீகாரில் புதன்கிழமை அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் அறிக்கை படி, நேற்று அதிகாலை 5.35 மணியளவில் அராரியாவில் இந்த நடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
An earthquake of magnitude 4.3 occurred in Araria, Bihar at around 5.35 am. The depth of the earthquake is 10 Km: National Center for Seismology pic.twitter.com/EyQUP4Wh9X
— ANI (@ANI) April 12, 2023
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட நில அதிர்வு!
மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் புதன்கிழமை அதிகாலை அதே தீவிரத்தில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலிகுரியில் இருந்து தென்மேற்கே 140 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நடுக்கம், முதலில் நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) மூலம் தெரிவிக்கப்பட்டது.
image credit:twitter
புதன்கிழமை அதிகாலை 5:35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக NCS தெரிவித்துள்ளது.ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.