டெல்லியை அடுத்து மற்றொரு இந்திய மாநிலத்திலும் நிலநடுக்கம்
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மற்றொரு இந்திய மாநிலம் ஒன்றில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
பீகாரில் நிலநடுக்கம்
இந்திய தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது. இது, பூமியில் இருந்து 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணாமாக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பீகார் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமும் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
பீகாரில் உள்ள சிவான் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 8.02 மணிக்கு ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |