அமெரிக்க மாகாணம் ஒன்றில் நிலநடுக்கம்: இரண்டு மாதங்களுக்கு முந்தைய நிலநடுக்கத்தின் தாக்கமா?
அமெரிக்க மாகாணமாகிய அலாஸ்காவை ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
Chinik என்ற நகரத்தின் கிழக்கே 71 மைல் தொலைவில், 29 மைல் ஆழத்தில், நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம், கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி அலாஸ்காவை தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கத்தில் தாக்கம் அல்லது அதைத் தொடர்ந்து ஏற்படும் சிறு நில அதிர்வாகும் என அலாஸ்கா நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் 28ஆம் திகதி, அமெரிக்க வரலாற்றிலேயே 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அலாஸ்காவை மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. அது ரிக்டர் அளவுகோலில் 8.2ஆக பதிவாகியது.
நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஹவாய் தீவை ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ள நிலையில், இதுபோன்ற சிறு சிறு நில அதிர்வுகள், ஒரு பெரிய நிலநடுக்கத்துக்குப் பின் பல வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் கூட தொடரலாம் என அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை தெரிவிக்கிறது.
நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. அத்துடன், சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
