பிரித்தானியாவின் வேல்ஸில் நிலநடுக்கம்! நள்ளிரவில் பீதியடைந்த மக்கள்
வேல்ஸில் நள்ளிரவில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பலர் பீதியடைந்தனர்.
நள்ளிரவில் நிலநடுக்கம்
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ரோண்டா பள்ளத்தாக்கிற்கு வடக்கே எட்டு மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தினால் தங்கள் படுக்கைகள் நகரந்ததாகவும், சுவர்கள் குலுங்கியதாகவும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்தனர்.
எனினும் இந்த அதிர்வுகள் அதிகபட்சம் இரண்டு வினாடிகள் மட்டுமே நீடித்ததாகவும், சேதத்தை விட அதிக குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் ஒரு சிலர் தெரிவித்தனர்.
(jamssy is licensed under CC BY-NC-ND 2.0)
பிரித்தானியா புவியியல் சங்கம்
இதற்கிடையில், பிரித்தானிய புவியியல் சங்கத்தின் கூற்றுப்படி இந்த நிலநடுக்கம் சமீபத்திய நாட்களில் பிரித்தானியாவைத் தாக்கும் முதல் நிலநடுக்கம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பெரும்பாலும் லேசான நிலநடுக்கங்கள் ஏற்படும் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் 200-300 நிலநடுக்கங்கள் அங்கு உணரப்படுகின்றன.
கார்ன்வாலில் கடைசியாக பதிவான நிலநடுக்கம் 0.5 ரிக்டர் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.