துருக்கி நிலநடுக்கம்... ஒரே ஹொட்டலில் உக்ரேனிய ரஷ்ய கால்பந்து வீரர்கள்: பின்னர் நடந்த பகீர் சம்பவம்
துருக்கியை மொத்தமாக சிதைத்த நிலநடுக்கத்தை அடுத்து, ரஷ்யா மற்றும் உக்ரேனிய கால்பந்து வீரர்கள் ஒரே ஹொட்டலில் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரே ஹொட்டலில்
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் Shinnik Yaroslavl கால்பந்து அணியினரும் உக்ரேனின் Minaj கால்பந்து அணியினரும் ஒரே ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இரு அணி வீரர்களும் முதலில் கருத்து மோதலில் ஏற்பட்டு, பின்னர் அது மிக மோசமாக தாக்கிக்கொள்ளும் நிலைக்கு சென்றுள்ளது. இந்த மோதலில் சில வீரர்களின் எலும்புகளும் உடைந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
@getty
Minaj கால்பந்து வீரர் ஒருவர் ரஷ்ய வீரரின் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்க, ஹொட்டல் ஊழியர் ஒருவரிடம் மோசமாக நடந்து கொண்டதையே உக்ரேனிய வீரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொந்தளிப்பையும் கடும் மோதலையும்
மட்டுமின்றி, மன்னிப்பு கேட்கவும் ரஷ்யர் மறுத்துள்ளதை அடுத்து உக்ரேனிய வீரர் அந்த ரஷ்ய வீரரின் முகத்தில் குத்தியுள்ளார். இந்த விவகாரம் இரு அணியினரிடையே கொந்தளிப்பையும் கடும் மோதலையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து தகவல் அறிந்து பொலிசாரும் அவசர மருத்துவ உதவிக்குழுவினரும் ஹொட்டலுக்கு வரவழைக்கப்பட்டு, காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மட்டுமின்றி, பொலிசார் இரு அணி வீரர்களையும் அமைதிப்படுத்தியுள்ளனர்.