உலகின் மிகப்பெரிய இரும்புச் சுரங்கம் கண்டுபிடிப்பு: பூமியின் வரலாற்றை மாற்றும் ஆய்வு
அவுஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய இரும்புச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலியாவின் ஹாமர்ஸ்லி பகுதியில், உலகின் மிகப்பெரிய இரும்புச் சுரங்கத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சுரங்கத்தில் சுமார் 58 பில்லியன் மெட்ரிக் டன் உயர்தர இரும்பு கனிமம் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இது இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய ஒற்றை இரும்பு சுரங்கமாகும். இதன் மதிப்பு சுமார் 5.7 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு அவுஸ்திரேலியாவின் இரும்பு ஏற்றுமதியில் உலகளாவிய ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.
மேலும், பூமியின் கனிமங்கள் எப்போது, எவ்வாறு உருவாகின்றன என்பதற்கான விஞ்ஞான புரிதலையும் மாற்றுகிறது.
University of Colorado மற்றும் University of Western Australia விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வில், இந்த இரும்பு சுரங்கம் Columbia Supercontinent உடைந்த காலத்தில், சுமார் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதுவரை நம்பப்பட்ட Great Oxidation Event (2.2-2.0 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்) காலத்தை விட சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகள் பின்னோக்கி உள்ளது.
அந்த காலத்தில் ஏற்பட்ட புவியியல் மோதல்கள்,கடலுக்கடியில் இரும்பு செறிந்த திரவங்கள் பெருமளவில் வெளியேறி, வேகமான கனிம உருவாக்கத்தை தூண்டியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"இது மெதுவான வேதியியல் செயல்முறை அல்ல, புவியின் அடித்தள அமைப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்" என ஆய்வின் முதன்மை எழுத்தாளர் Liam Courtney-Davies கூறியுள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு பூமியின் கனிம வரலாற்றை மீண்டும் மதிப்பீடு செய்யும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Earths largest iron ore in australia, Earths largest iron ore deposit australia, australia iron ore deposit