புலம்பெயர்ந்தோர் சிலரை பிரான்சிலிருந்து நாடுகடத்துதலை எளிதாக்கும் மசோதா: விவாதம் துவங்கியது
பிரான்ஸ் செனேட்டர்கள், புலம்பெயர்தல் சட்டங்களை கடினமாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள மசோதா ஒன்றின் மீதான விவாதத்தைத் துவங்கியுள்ளார்கள்.
உள்துறை அமைச்சர் விளக்கம்
இது குறித்து பேசிய பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin, இந்த சட்டம், புலம்பெயர்தல் மீது கண்டிப்புடன் இருப்பதைக் குறித்தது என்றார். குறிப்பாக, குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மீது கண்டிப்புடன் நடந்து, அவர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றும் நோக்கம் கொண்டது இந்த மசோதா என்று கூறியுள்ளார் அவர்.
SBS
இந்த நடவடிக்கை, சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் என கருதப்படும் வெளிநாட்டவர்களை பிரான்சிலிருந்து நாடுகடத்துதலை விரைவாக்க உதவும் என்கிறது பிரான்ஸ் அரசு.
அதே நேரத்தில், பணியாளர் தட்டுப்பாடு நிலவும் துறைகளில் பணியாற்றும் ஆவணங்களற்றோருக்கு, சில நிபந்தனைகளின் கீழ், சட்டப்படி பிரான்சில் வாழ அனுமதிக்கவும், புதிய சட்டத்தில் வழிவகை உள்ளது என்கிறார் Gérald Darmanin.
உருவாகியுள்ள எதிர்ப்பு
இந்நிலையில், அந்த மசோதாவுக்கு பிரான்சில் எதிர்ப்பும் உருவாகியுள்ளது. வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை அமைப்புகளும், இந்த மசோதா புகலிடக்கோரிகையாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்கு அச்சுறுத்தல் என விமர்சித்துள்ளார்கள்.
PBS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |