தடுப்பூசி போட்ட பயணிகள் பிரித்தானியாவிற்குள் நுழைய அனுமதியா? வெளியான முக்கிய தகவல்
தடுப்பசி போட்ட பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
பிரித்தானியாவின் பயண பட்டியில் பச்சை, அம்பர் மற்றும் சிவப்பு என பட்டியலிடப்பட்டுள்ளது.
கொரோனா ஆபத்து குறைவாக உள்ள நாடுகள் பச்சை நிற பட்டியலிலும், ஆபத்தாக கருத்தப்படும் நாடுகள் அம்பர் பட்டியலிலும், மிக ஆபத்தாக கருதப்படும் நாடுகள் சிவப்பு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு நிறத்திற்கும் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தளர்த்துவது குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
விரைவில் வெளிநாடுகளில் இயல்பு நிலை திரும்பி மக்கள் சுற்றுலா செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த கட்டத்தில் பிரித்தானியா அரசின் தற்போதைய அணுகுமுறை சரியானது, ஆனால் அரசு தொடர்ந்து தனது நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறது.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.