லண்டனில் இளம்பெண்ணை பின் தொடர்ந்து வீட்டுக்கு சென்று உள்ளாடைகளை திருடிய இளைஞன்! நீதிமன்றம் கொடுத்த தண்டனை
லண்டனின் இளம்பெண்ணை பின் தொடர்ந்து அவர் வீட்டுக்கு சென்று பொருட்களை திருடிய இளைஞனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டனை சேர்ந்த பெண் ஒருவரை கடந்தாண்டு பின் தொடர்ந்து சென்ற 28 வயதான சார்லஸ் கோக்ஸ் அவர் வீட்டுக்கும் சென்றிருக்கிறார்.
இதன்பின்னர் சில முறை அதே போல அப்பெண் வீட்டுக்கு சென்று தோட்டத்தில் உள்ள இடங்களை சேதப்படுத்தியிருக்கிறார்.
இதனை பார்த்த அப்பெண் சந்தேகமடைந்து அந்த இடத்தில் சிசிடிவி கமெராவை பொருத்தினார்.
பின்னர் கடந்த நவம்பர் 3ஆம் திகதி மீண்டும் அங்கு சென்ற சார்லஸ் அப்பெண்ணின் உள்ளாடைகள், சாவிகள், செருப்புகளை திருடி சென்று ஓடியிருக்கிறார்.
இதன்பின்னர் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போது சார்லஸை அதில் கண்டு அப்பெண் அதிர்ந்து போய் பொலிசில் புகார் அளித்தார்.
இதோடு திருட்டு சம்பவத்தின் போது சார்லஸ் தனது டி.என்.ஏ தடத்தை வீட்டு பின் வாசலில் விட்டு சென்றதும் தெரியவந்தது.
பின்னர் பொலிசார் தீவிர விசாரணைக்கு பின்னர் சார்லஸை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி பெண்ணை குறிவைத்து பின் தொடர்ந்து சென்று திருட்டில் ஈடுபட்ட சார்லஸுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதோடு 10 ஆண்டு பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு £190 இழப்பீடு கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது