23 வார கர்ப்பிணி... வெறும் கத்தரிக்கோலால் லண்டன் நபரின் வெறிச்செயல்: பதறவைக்கும் சம்பவம்
கிழக்கு லண்டனில் தனது 23 வார கர்ப்பிணியான காதலியை கொடூரமாக தாக்கி கொலை செய்த நபருக்கு குறைந்தபட்சம் 27 ஆண்டுகள் என ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
23 வார கர்ப்பிணியான காதலி
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி கிழக்கு லண்டனின் ஹாக்னி பகுதியில் தொடர்புடைய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
@dailymail
37 வயதான லியாம் டெய்லர் என்பவர் தமது 23 வார கர்ப்பிணியான காதலியை வெறும் கத்தரிக்கோலால் 40 முறை கொடூரமாக தாக்கியுள்ளார். அத்துடன் ஆத்திரம் அடங்காத அந்த நபர் டம்பல் ஒன்றால் தலையை பதம் பார்த்துள்ளார்.
இந்த நிலையில், 28 வயதான ஐலிஷ் வால்ஷ் ரத்தவெள்ளத்தில் நினைவற்ற நிலையில் அவரது சொந்த தந்தையால் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தாக்குதல் நடந்த அந்த நாள் பகலில் பொலிசாரால் டெய்லர் கைது செய்யப்பட்டார்.
முன்னெடுக்கப்பட்ட மருத்துவ சோதனையில் அந்த நபர் போதை மருந்து உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. கைது நடவடிக்கையின் போது டெய்லர் பொலிசாரிடம் தெரிவிக்கையில், புத்தி பேதலித்த ஒரு நிமிடம் போதும் நமது மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாற என குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஒரு பெண் குழந்தை
வழக்கு விசாரணையில், டெய்லர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. மட்டுமின்றி, ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான டெய்லர், ஆண் பிள்ளைக்காக ஆசைப்பட்ட நிலையில் தமது காதலி மீண்டும் ஒரு பெண் குழந்தையை கருவில் சுமக்கிறார் என்ற தகவல் அவரது மன அமைதியை குலைத்திருந்தது என விசாரணையில் தெரிய வந்தது.
Credit: GoFundMe
ஐலிஷ் வால்ஷ் கொடுரமாக தாக்கி கொல்லப்பட்டது குடும்ப வன்முறையின் உச்சம் என குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், இந்த தாக்குதல் சம்பவமானது துன்பகரமான பாலியல் இயல்புடையதாக உள்ளது என தெரிவித்துள்ளது.
டெய்லரை பொறுத்தமட்டில், உலோக கம்பம் ஒன்றால் சொந்த தாயாரை தாக்கிய விவகாரத்தில் 12 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தவர் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது குறைந்தபட்சம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை நிம்மதியடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |