திருமணத்திற்கு மறுத்த திருமணமான பெண்ணை பின் தொடர்ந்து துன்புறுத்திய லண்டன் நபர்: முழு பின்னணி
கிழக்கு லண்டனில் திருமணமான பெண்ணை கட்டாயப்படுத்தி திருமண கோரிக்கை வைத்ததுடன், பலாத்காரம் செய்துவிடுவதாக மிரட்டலும் விடுத்த நபரை நீதிமன்றம் சிறை தண்டனையில் இருந்து விடுவித்துள்ளது.
கட்டாயப்படுத்தி திருமண கோரிக்கை
கிழக்கு லண்டனில் குடியிருந்து வருபவர் 34 வயதான ஹசன் அலி. இவருக்கான தண்டனை விவரங்களை புதன்கிழமை Snaresbrook கிரவுன் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜூன் 2022ல் இதே நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அவர் மீது இரண்டு தாக்குதல் மற்றும் துன்புறுத்தல்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
Image: MyLondon
2020 மார்ச் மாதம் இல்ஃபோர்ட் பகுதியில் பணியாற்றிவந்த பெண் ஒருவரை பின் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததையும் நீதிமன்ற விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி திருமண கோரிக்கை வைத்துள்ளார் ஹசன் அலி.
இதற்கு மறுத்த அவரை தாக்கி, அவரது அலைபேசியைப் பறித்து, அவர் முகத்தில் அறைந்து, கையில் காயம் செய்து, இரு கைகளையும் கடித்து வைத்ததாகவும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த நிலையில், குறித்த பெண் உதவிக்கு தமது கணவரை அழைக்க, சுதாரித்துகொண்ட அலி, அங்கிருந்து தப்பியுள்ளார். ஆனால், திரும்பி வந்த அலி, தம்மிடம் ஆயுதம் இருப்பதாக கூறி மிரட்டியுள்ளார்.
ஒருமுறை தொடர்புடைய பெண்மணியின் குடியிருப்புக்கு சென்ற அலி, அவரை கட்டாயப்படுத்தி, தம்முடன் அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். மட்டுமின்றி, வர மறுத்தால் பலாத்காரம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளதுடன், முகத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.
முகம் சுழிக்கவைக்கும் புகைப்படங்கள்
மேலும், திருமணத்திற்கு மறுத்தால் தாம் தற்கொலை செய்துகொள்வதாக கூறியும் உளவியல் ரீதியாக அந்த பெண்மணியை ஹசன் அலி துன்புறுத்தியுள்ளார். 2018ல் இதேப்போன்ற ஒரு வழக்கில் ஹசன் அலி உட்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image: MyLondon
ஹசன் அலிக்கு பயந்து பெண் ஒருவர் தமது சகோதரியை பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். முகம் சுழிக்கவைக்கும் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளதுடன், அதை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாகவும் அலி மிரட்டியுள்ளார்.
அத்துடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த வழக்குகளில் ஹசன் அலிக்கு நீதிமன்றம் 200 மணிநேரம் ஊதியமில்லாத வேலையைச் செய்ய உத்தரவிட்டதுடன்,
பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொள்ளவோ அல்லது அவர் இருக்கும் இடங்களுக்குச் செல்வதையோ தடுக்கும் ஐந்து ஆண்டு கால தடை உத்தரவையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த நிபந்தனைகளை மீறினால், கட்டாயம் சிறை தண்டனை என நீதிமன்றம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |