கிழக்கு லண்டனில் 16 வயது சிறுமி உயிரிழப்பு: 48 வயதுடைய நபர் கைது
கிழக்கு லண்டனில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 48 வயது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயது சிறுமி உயிரிழப்பு
கிழக்கு லண்டனில் உள்ள ஒரு குடியிருப்பில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் 16 வயது சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, 48 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை சுமார் 15:40 மணிக்கு சிறுமியின் பாதுகாப்பு குறித்து தகவல் கிடைத்ததும் East Ham பகுதியில் உள்ள Grosvenor Gardens-க்கு பொலிஸார் விரைந்தனர்.
ஆனால், 16 வயது அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

48 வயது சந்தேக நபர் கைது
இந்த சம்பவத்துக்குப் பின்னர், வெள்ளிக்கிழமை இரவு ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் 48 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
உயிரிழந்த சிறுமியும், கைது செய்யப்பட்ட நபரும் முன்பே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என விசாரணை அதிகாரிகள் எண்ணுகின்றனர்.