லண்டனை மொத்தமாக உலுக்கிய சம்பவம்: இளைஞர் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்
லண்டனில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப் படை உறுப்பினர்களைக் கொல்ல சதி செய்த விவகாரத்தில் இளம் பயங்கரவாதி ஒருவர் பல ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத குற்றச் செயல்களுக்காக
அந்த இளைஞரின் திட்ட,ம் தொடர்பில் தெரியவந்த பொதுமக்களில் சிலர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
19 வயதேயான மத்தேயு கிங் என்பவர் பயங்கரவாத குற்றச் செயல்களுக்காக இன்று வெள்ளிக்கிழமை ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் தண்டனை தீர்ப்புக்காக காத்திருக்கிறதாக கூறப்படுகிறது.
@getty
எசெக்ஸ் பகுதியை சேர்ந்த கிங் டிசம்பர் 22, 2021 முதல் மே 17, 2022 வரையிலான ஐந்து மாத காலப்பகுதியில் பயங்கரவாத செயல்களுக்கு என திட்டம் தீட்டியுள்ளார் என விசாரணையில் அம்பலமானது.
மேலும், குறித்த இளைஞர் கிழக்கு லண்டனில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட் ரயில் நிலையம் மற்றும் ராணுவ முகாம் பகுதிகளுக்கும் சென்றதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, கைதாவதற்கு முன்னர் ஒருவார காலம் அப்பகுதியை தீவிரமாக நோட்டமிட்டுள்ளதும் பொதுமக்களால் உறுதி செய்யப்பட்டது.
அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்
இந்த நிலையிலேயே, சந்தேகத்தின் அடிப்படையில் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர். மேலும், கிங் வெளியிட்ட காணொளி ஒன்றில் கத்தியுடன் தோன்றும் நபரை குறிப்பிட்டு, ஜிஹாத் இல்லை, போர் இல்லை என்று சொன்னவர்கள், பொய் சொல்கிறார்கள் எனவும் கூறியிருந்தார்.
Image: Met Police
இளைஞர் கிங் தொடர்பில் இதற்கு முன்னர் எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாத நிலையில், அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு மட்டுமே பதிவாகியுள்ளதுடன், தமது குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.