கணவனின் கொடுஞ்செயல்... லண்டன் பெண்ணின் உடலை நதியில் தேடும் அதிகாரிகள்
கிழக்கு லண்டனில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை ஆற்றில் முக்குளிக்கும் குழுவினருடன் பொலிசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியா நதியில் வீசப்பட்ட சடலம்
லண்டனில் Orchard Place பகுதியில் குடியிருந்து வந்த 45 வயது சுமா பேகம் என்ற பெண்மணி கடைசியாக ஏப்ரல் 28ம் திகதி உயிருடன் காணப்பட்டர் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Credit: Runner Media
மட்டுமின்றி தமது மனைவியை கொன்று அவரது சடலத்தை ஒரு சூட்கேஸில் அடைத்து கணவனே லியா நதியில் வீசியுள்ளதாக விசாரணை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இந்த நிலையில் கைதான அமினன் ரஹ்மான்(45) செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானதுடன், பொலிஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அமினன் தமது மனைவியை கொலை செய்தாரா அல்லது கழுத்தை வெட்டினாரா என்பது தொடர்பில் குற்றச்சாட்டு மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவர் மீது குற்றச்சாட்டு
ஏப்ரல் 30ம் திகதி சுமா பேகம் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு லியா ஆற்றில் வீசப்பட்டதாக அவர் கணவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Credit: Met Police
இந்த நிலையில், காவல்துறையை சேர்ந்த 5 முக்குளிக்கும் வீரர்கள் குழு ஒன்று இந்த சம்பவம் தொடர்பில் ஆற்றுக்குள் இறங்கி தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பில் மே 4ம் திகதி அமினன் ரஷ்மான் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை 25ம் திகதி அவர் தனது மனு மீதான விசாரணைக்காக ஓல்ட் பெய்லி கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜராவார் என கூறுகின்றனர்.