வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டுமா? எளிதான இயற்கை மருத்துவம் இதோ
வாயுப் பிரச்சனை, அஜீரணம், வயிற்றில் சத்தம், தொப்பை, வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் வயிற்றில் ஏற்படுகிறது.
வயிறு சம்மந்தமான பிரச்சினைகளை தீர்க்க எளிய இயற்கை மருந்துகள் உள்ளது.
தொப்பை குறைய
சுரைக்காயை இரண்டு வாரம் 2 தடவை சாப்பிட்டு வர தொப்பை குறையும்
வாயு தொல்லை நீங்க
விளாம்பழத்தின் கொழுந்து இலைகளை பறித்து கசாயம் வைத்து சாப்பிடுவதால் வாயுத்தொல்லை நீங்கும்
குடற்புண் குணமாக
வில்வப்பழம் ஓட்டை உடைத்து சதையை எடுத்து இதனுடன் சர்க்கரை சேர்த்து பிசைந்து காலையில் மட்டும் சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல் புண் வாய்ப்புண் குணமாகும்
பசியின்மை பிரச்சினையா
சுண்டை வற்றல் கறிவேப்பிலை மிளகு சீரகம் வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம் தீர்ந்து நன்றாக பசி எடுக்கும்.
வயிற்று வலி
மாதுளம் பழத்தின் தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி அந்த தூளை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாவதை உணரலாம்.