இந்த ஒரு எளிய பொருள் இத்தனை நோய்களை தீர்க்குமா! கல்லீரல் பலமாவதுடன், தலைமுடியும் கொட்டாது
கரிசலாங்கண்ணி பல்வேறு நன்மைகளை கொண்டது. வெள்ளை நிற பூக்களை உடைய கரிசலாங்கண்ணி எளிதில் கிடைக்க கூடியது. உப்பு சத்து உடையது.
கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கலாம்.
கல்லீரல், மண்ணீரலை பலமாக்க
தேவையான பொருட்கள்
கரிசலாங்கண்ணி வேர், அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு, சீரகம். செய்முறை: கரிசலாங்கண்ணி வேரை சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரப் பொடி, சிறிது பனங்கற்கண்டு, சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி அன்றாடம் குடித்துவர கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம் வற்றிப்போகும்.
தலைமுடி ஆரோக்கியம்
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய், கரிசலாங்கண்ணி, அதிமதுரப்பொடி, நெல்லிவற்றல் பொடி. செய்முறை: பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும். இதில், அரைத்து வைத்திருக்கும் கரிசலாங்கண்ணி இலை விழுது, அதிமதுரப் பொடி, நெல்லிவற்றல் பொடி சேர்த்து நன்றாக கலந்து தைலமாக காய்ச்சவும்.
இதை வடிகட்டி தலை குளித்து வந்தால் முடி நன்றாக வளரும், முடி கொட்டும் பிரச்சினை தீரும். தலைமுடி கருமையாகும்.
சிறார்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். கற்கண்டு அல்லது பணங்கற்கண்டு அல்லது வெல்லத்தை நீரில் கரைத்து ஓரிருமுறை கொடுப்பதால் சிறுநீர் எரிச்சல் அடங்கிப்போகும்.