பாதங்களை அழகாக்க இனி வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்: எப்படி செய்வது?
பெண்கள் எப்போதுமே தன்னை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
சரும பராமரிப்பிற்கு காட்டும் அக்கறையை நாம் கால்களைப் பாதுகாக்கவும் கொடுக்க வேண்டும்.
நாம் பாதங்களை அழகுப்படுத்துவது என்பது வெறும் ஆடம்பரத்திற்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம், தசைகள் இறுக்கம் பெறவும் வழிவகுக்கிறது.
மேலும் கால்களில் ஆணி, பூஞ்சை தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்க உதவியாக உள்ளது.
இதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று தான் பெடிக்யூர் செய்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- நக வெட்டி
- உப்பு
- நெயில் பாலிஷ்
- பிரஷ்
- வெதுவெதுப்பான தண்ணீர்
- காட்டன் துணி
எப்படி செய்வது?
முதலில் கால்களில் நீளமாக வளர்ந்துள்ள நகங்களை வெட்டிக் கொள்ளவும்.
நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் ஏற்கனவே நகங்களில் போட்டுள்ள நெயில் பாலிஷை அகற்றிக் கொண்டு, நகங்களை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்ச்சவும். தண்ணீர் ஓரளவிற்கு காய்ந்தவுடன் அதனுடன் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இதையடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் காய்ச்சிய தண்ணீரை ஊற்றி கணுக்கால் வரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் கலந்துக் கொள்ளவும்.
இதனுடன் ஷாம்பு, தேங்காய் எண்ணெய், பேக்கிங் போசடா போன்றவற்றைக் கலக்கவும். எலுமிச்சை தோலைக் கொண்டு கால் விரல்களின் இடுக்குகள் மற்றும் பாதங்களில் நன்கு தேய்க்க வேண்டும்.
பின்னர் முன்னதாக கலந்து வைத்துள்ள தண்ணீருக்குள் கால்களை வைத்து மசாஜ் செய்யவும். பின்னர் காட்டன் துணியைக் கொண்டு கால்களை ஈரமில்லாமல் துடைத்தெடுக்கவும்.
இதையடுத்து மாய்ஸ்சரைகளைப் பயன்படுத்தி, பின் நெயில் பாலிஷ்களைப் போட்டுக்கொள்ளலாம்.
இதனால் குதிக்கால் வெடிப்பு, வறட்சி மற்றும் வெண்மையான தோல் போன்ற பிரச்சனை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |