உடல் சூட்டை எளிதாக குறைக்க இதை சாப்பிடுங்கள் போதும்!
உடல் சூடாகும் பிரச்சினையை பலரும் சந்திப்பார்கள். உடல் சூட்டை தணிக்க சில எளிய உணவுகளை சாப்பிட்டால் போதும்., சூடு குறைந்து உடல் குளிர்த்தியாகும்.
சீரகம்
சீரகத்தை சிறிது பசுவெண்ணெயில் கலந்து காலை மற்றும் மாலை இருவேளைகளில் உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.
சோம்பு
சோம்பு நறுமணமிக்க நல்ல சுவையுடைய மசால பொருள். சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.
வெங்காயம்
வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
இளநீர்
இளநீர் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் வெப்பத்தை போக்கி உடலை குளிர்விக்கும். தினமும் இளநீரை குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியை உணடாக்கும்.
மாதுளம் பழம்
மாதுளை பழத்தில் நீர்சத்து அதிகம் உள்ளது.மாதுளை உடலுக்கு குளிர்ச்சியை தரும். மாதுளை ஜூஸில் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியை தரும்.
தர்பூசணி
தர்பூசணியில் நீர்சத்து அதிகம் நிறந்துள்ளன.தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் வெப்பத்தை குறைத்து.உடல் குளிர்ச்சியை உண்டாக்கும்.