2000 ரூபாய் நோட்டுகளை வீட்டில் இருந்தபடியே எளிதில் மாற்றலாம்: இதனை செய்தால் போதும்
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை வீட்டில் இருந்தபடியே எளிதில் மாற்றிக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு
வரும் செப்டம்பர் 30ஆம் திகதி முதல் இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வங்கிக்கு விரைந்தனர்.
வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ள இயலாதவர்களின் சிரமத்தை குறைக்க அமேசான் (Amazon) நிறுவனம் புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது.
இதன்மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அமேசான் திட்டம்
Cash Load at Doorstep என்ற திட்டத்தின் மூலம், KYC செய்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி ஏஜெண்ட்களை அனுப்பி மீதம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை அமேசான் பெரும்.
ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் வரை 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, Amazon Pay Balance கணக்கில் நாம் ஏற்றிக் கொள்ளலாம். மேலும், மக்கள் ஒன்லைனில் கொடுக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் பணமாக அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Cash Load At Door stepயை பயன்படுத்தும் வழிமுறை:
- முதலில் KYC செய்த பின்னர், Amazon KYC வாடிக்கையாளராக நீங்கள் மாற வேண்டும்.
- இதற்கு உங்களின் செல்பி புகைப்படம் மற்றும் PAN Card (பான் கார்டு) தேவை. ஐந்து நிமிடங்களில் Video KYC செய்ய வேண்டும்.
- KYC செய்ய எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
- உங்களின் ஆதார் கார்டு எண்ணை உள்ளிட்டு, அதன் பிறகு அமேசான் ஏஜென்ட் ஒருவரிடம் வீடியோ கால் (Video Call) பேச வேண்டும்.
- அதன் பிறகு 'Cash On Delivery' Order ஒன்றை Amazon மூலம் மேற்கொள்ளவும்.
- உங்கள் Deliveryயை எடுத்து வரும் ஏஜெண்டிடம் நீங்கள் வைத்திருக்கும் பணத்தை கொடுத்து, Amazon Pay Balance பணமாக உடனடியாக மாற்றிக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |