ஒரு எலுமிச்சை இருந்தா போதும்... மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்
பொதுவாகவே ஆண் பெண் என வேறுபாடின்றி சந்திக்கும் பிரச்னை உடல் எடை அதிகரிப்பு தான். இதனால் பலரும் தினம் தினம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உடல் எடை அதிகரிப்பால் வேறு நோய்களும் எற்படும். பொதுவாகவே ஒரு விடயம் சொல்ல வேண்டுமென்றால், பெண்களுக்கு மாதம் மாதம் வரும் மாதவிடாயில் கூட இந்த உடல் எடை அதிகரிப்பு பங்களிப்பு செய்கின்றது.
ஒரு சிலர் உடற்பயிற்சி செய்து எடை குறைப்பர். ஒரு சிலருக்கு அதற்கான நேரம் இருக்காது. ஒரே இடத்தில் இருந்து வேலை செய்யும் வேலை தான் அதிகமாக இருக்கும்.
அவர்கள் வீட்டில் இருந்துக்கொண்டே சமையலறையில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எப்படி உடல் எடையை குறைக்கலாம் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
டீடாக்ஸ் வாட்டர்
டீடாக்ஸ் வாட்டர் என்பது நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை சுத்தப்படுத்தும். இதனால் உடல் எடையானது இலகுவாக குறையும்.
விருப்பமான பழங்கள் அல்லது காய்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு போத்தலில் தண்ணீர் ஊற்றி குறைந்தது 8 மணிநேரமாவது வெட்டிய பழங்களை சேர்த்து ஊற வைத்து பின்பு குடித்தால் நல்லது.
பானகம்
நமது ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலுக்கு உடனடியாக ஆற்றலை தருகின்றது.
முதலில் வெல்லத்தையும் புளியையும் தனித்தனியே சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து, இத்துடன் சுக்குத்தூள், மஞ்சள்தூள், ஏலக்காய்த்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து கலக்கவும். பின்பு எலுமிச்சைச்சாறு, புதினா இலைகள் சேர்த்து குடித்தால் நல்லது.
வெல்லமும் எலுமிச்சையும்
வெல்லம் மற்றும் எலுமிச்சையானது பொதுவாகவே உடல் பருமன், கொழுப்பு அதிக எடை, நீரிழிவு பிரச்சினைகளுக்கு நிவாரணியாக இருக்கும். வெதுவெதுப்பாக இருக்கும் வெல்லம் கலந்த நீரில் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். இவை இரண்டையும் நன்றாக கலந்து இதை குடித்து வர உடல் எடையானது குறைந்து விடும்.
வெந்தயப் பொடி
வெந்தயப் பொடியை எடுத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிடுங்கள். இதன் மூலம் நீங்கள் நிச்சயம் பயனடையலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |