விமானம் தரையிறங்கும் நேரத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்... சுவிட்சர்லாந்தில் விசாரணை துவக்கம்
கடந்த ஆண்டு, விமானம் ஒன்று தரையிறங்கும் நேரத்தில் ஏரியில் விழுந்துவிடும் நிலைக்கு ஆளான விவகாரம் தொடர்பில் சுவிட்சர்லாந்தில் விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
அளவுக்கு மீறி கீழிறங்கிய விமானம்
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 5ஆம் திகதி, எடின்பர்கிலிருந்து புறப்பட்ட easyJet விமானம் ஒன்று, ஜெனீவா விமான நிலையம் நோக்கிச் சென்றுள்ளது.
David Parry/PA Wire
விமான நிலையத்தை நெருங்கும்போது, அந்த விமானம் அலவுக்கு மீறி தாழ்வாக பறந்துள்ளது. தரை மட்டத்திலிருந்து 750 மீற்றர் உயரத்தில் பறக்கவேண்டிய விமானம், 230 மீற்றர் உயரத்தில் பறந்துள்ளது.
ஏரியில் விழும் அபாயம்
அதனால், கிட்டத்தட்ட ஜெனீவா ஏரியில் அந்த விமானம் விழும் அபாயம் உருவாகியுள்ளது. ஆனால், விமானிகள் உடனடியாக விமானத்தை உயர எழுப்பியுள்ளார்கள்.
அதனால், பெரும் விபத்து ஏற்பட இருந்த சூழலிலிருந்து வெறும் 30 விநாடிகளில் விமானம் தப்பியதாக செய்திகள் கூறுகின்றன.
இரண்டாவது முயற்சியின்போதுதான் விமானிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்கள்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சுவிஸ் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட விமானிகள் தற்போது விடுப்பில் இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |