சுவிஸ் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: ஆண்டுக்கு 13 மாத சம்பளம்
சுவிஸ் நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு பெருமளவிலான ஊதிய உயர்வு ஒன்றை அளிக்க முன்வந்துள்ளது.
13 மாத சம்பளம்
சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட easyJet விமான நிறுவனம், தனது பணியாளர்களுக்கு 13ஆவது மாத சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது.
அதாவது, ஆண்டுக்கு ஒரு மாத சம்பளத்தை கூடுதலாக வழங்க easyJet நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் 10 சதவிகித ஊதிய உயர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதிய விடயத்திலும் பல நல்ல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சராசரியாக, மாதம் ஒன்றிற்கு பணியாளர் ஒருவரது வருவாயில் 1,500 சுவிஸ் ஃப்ராங்குகள் அதிகரிக்க உள்ளன.
தங்கள் பேச்சுவார்த்தைகள், எதிர்பார்த்ததைவிட நல்ல பலன் அளித்துள்ளதால், தொழிலாளர் யூனியன்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |