தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சை சாப்பிடுங்க! இந்த நன்மைகள் உங்களை வந்து சேரும்
Diabetes
Migraine
Indigestion
Eye Problem
By Kishanthini
பொதுவாக திராட்சை. திராட்சை அனைவருக்குமே பிடித்த ஓர் பழமும் கூட. இதை பழங்களின் ராணி என்றும் அழைப்பர். திராட்சையில் மூன்று வகைகள் உள்ளன. அதில் கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் என நிறங்களின் அடிப்படையில் மூன்று வகையான திராட்சைகள் உள்ளன.
மூன்று வகை திராட்சைகளுமே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கியவை. இருப்பினும் பெரும்பாலானோர் கருப்பு நிற திராட்சையையே அதிகம் விரும்பி சாப்பிடுவர்.
ஏனெனில் கருப்பு திராட்சையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. கருப்பு திராட்சை சாப்பிடுவதால் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
அந்தவகையில் தற்போது கருப்பு திராட்சை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- கருப்பு திராட்சை முதுமையில் தாக்கும் அல்சைமர் நோயில் இருந்து பாதுகாக்கும்.மேலும் கருப்பு திராட்சை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நரம்பு செல்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
- கருப்பு திராட்சையில் உள்ள வளமான அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். எனவே உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால் கருப்பு திராட்சையை தினமும் சாப்பிடுங்கள்.
- கருப்பு திராட்சை வயிற்றில் ஏற்படும் எரிச்சல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்து, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.
- கருப்பு திராட்சையை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், அது யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரகங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் மற்றும் இதய அமைப்பில் இருந்தும் அமிலங்களை வெளியேற்றும்.
- கருப்பு நிற திராட்சையில் உள்ள அதிகளவிலான சர்க்கரை, செல்லுலோஸ் மற்றும் ஆர்கானிக் அமிலம் போன்றவை வயிற்றை ஒரு நல்ல அமைப்பில் வைத்து, அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து, கழிவுகள் எளிதில் உடலில் இருந்து வெளியேற உதவும்.
- கருப்பு திராட்சையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, காலையில் குடியுங்கள். இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, அடிக்கடி வரும் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுவிக்கும்.
- தினமும் ஒரு டம்ளர் கருப்பு திராட்சை ஜூஸ் அல்லது ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
- கருப்பு திராட்சை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் ஒரு கையளவு சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வருவது நல்லது.
- கருப்பு திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால், அது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளும்.
- கருப்பு திராட்சையை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால் ஆன்டி-ஏஜிங் பொருள் போன்று செயல்பட்டு, சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
- தினமும் கருப்பு திராட்சையை சாப்பிடுவது சரும செல்களுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி, சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
- சருமத்தில் உள்ள கருமையான தோற்றத்தைத் தரும் இறந்த செல்களைப் போக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த கருப்பு திராட்சையை சாப்பிடுவதுடன், அதன் சாற்றினை தினமும் முகம், கை, கால்களில் தடவி நன்கு காய்ந்த பின் நீரால் கழுவ வேண்டும்.
- கருப்பு திராட்சை சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகள் மற்றும் சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையுடன் காட்சியளிக்க வைக்கும்.
- கருப்பு திராட்சையை சாப்பிட்ட பின்பு, அதன் விதைகளை தூக்கி எறியாமல் அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இதனால் கருப்பு திராட்சையில் உள்ள லிவோலியிக் அமிலம் மயிர்கால்களை வலிமைப்படுத்துவதோடு, முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியை வலிமையாக்கும்.
- கருப்பு திராட்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் தான், பொடுகை நீக்கி, தலைமுடியை பட்டுப் போன்று, மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US