இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த ஒரே ஒரு பயிறு போதும்: இப்படி செஞ்சி சாப்பிடுங்கள்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
அதிலும், இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
அந்தவகையில், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கருப்பு கொண்டைக்கடலையை தினசரி உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்துக்கொள்ள கருப்பு கொண்ட கடலையை எப்படி சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
எப்படி சாப்பிடுவது?
8 மணி நேரம் கருப்பு கொண்டை கடலையை ஊறவைத்து குக்கரில் போதுமான நீர் விட்டு உப்பு சேர்த்து. 5 விசில் விடவும். பிறகு சுண்டலில் நீர் வடிகட்டி அப்படியே சாப்பிடலாம்.
வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் நறுக்கி சேர்க்கவும். காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்க்கவும். பிறகு சுண்டல் சேர்த்து நன்றாக கலந்து கொத்துமல்லி தழை தூவி சாப்பிடலாம்.
தேவைக்கு எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துகொள்ளலாம். முளைக்கட்டி சேர்க்கலாம். கிரேவி செய்து உணவில் சேர்க்கலாம்.
இதன் நன்மைகள்
கருப்பு கொண்டைக்கடலை ஆக்ஸிஜனேற்றத்தின் மூலம் என்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும். இதய நோய் அபாயம் , கொழுப்பு அளவு கட்டுக்குள் இருக்கும்.
இரும்புச்சத்து நிறைந்தவை என்பதால் கூந்தல் ஆரோக்கியம் மேம்படுத்தும்.
உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதால் ரத்த சோகையை தடுக்கும்.
சைவ உணவு உண்பவர்களுக்கு இது புரதம் நிறைந்த ஒன்றாக இருக்கும்.
நார்ச்சத்து கொண்டவை என்பதால் இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்யும்.
குறிப்பாக எடை இழப்பை உறுதி செய்யும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |