தேனில் ஊற வைத்த பூண்டு: ஒரே இரவில் 7 கிலோ எடையை குறைக்கலாம்; எப்படி தெரியுமா?
பொதுவாகவே சமையலறையில் இருக்கும் மருந்து பொருட்களை நம் உணவில் புறக்கணித்து வருவது வழக்கம். என்ன தான் நன்மைகளை வழங்கினாலும் அதன் சுவையால் நீங்கள் புறக்கணிக்க தான் செய்வீர்கள். அதில் ஒன்று தான் பூண்டு.
பல முறைகளில் பூண்டானது உடலுக்கு உதவுகிறது. வெறும் வயிற்றில் பூண்டு மற்றும் தேன் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. அது எப்படி என்று விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
பூண்டின் நன்மைகள்
பூண்டில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
இதில் அல்லிசின் என்ற தனிமம் உள்ளது, இது கொழுப்பின் அளவைக் குறைக்கிறது மற்றும் இரத்தக் கட்டிகளைத் தடுக்கிறது.
பூண்டில் மாங்கனீஸ், வைட்டமின் பி6, செலினியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
இது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. பூண்டில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
தேனின் நன்மைகள்
தேன் ஒரு இயற்கை இனிப்பாகும். இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இதில் உள்ளன.
தேன் செரிமானத்திற்கு உதவுகிறது. இது உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஒரு நல்ல ஆற்றலையும் வழங்குகிறது.
பூண்டு மற்றும் தேன்
பூண்டுகள் அனைத்தும் உரித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
பின்னர் அவற்றை ஒரு வெற்று கண்ணாடி குடுவையில் சேர்த்து, தேன் ஊற்றவும்.
நீங்கள் அதை சாப்பிடுவதற்கு முன் சில நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.
தேனில் ஊறவைத்த 1 பல் பூண்டை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடையையும் சீக்கிரமாக குறைத்துக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |