தினமும் தேனை இந்த மாதிரி சாப்பிடுங்க! உடல் எடை மளமளவென குறையுமாம்
பொதுவாக தேன் பல அற்புத நன்மைகளை கொண்டது.
குறிப்பாக இதில் உள்ள உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன மற்றும் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொற்றுக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன.
தேனை சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என்பதை நாம் அனைவருமே கேள்விபட்டிருப்போம்.
ஆனால் தேனுடன் சில பொருட்களை சேர்த்து உட்கொள்வதன் மூலம் உடல் எடை இன்னும் சிறப்பாக குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும். இப்போது அந்த வழிகளில் ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் - 1/2 கப்
பட்டை - 1 துண்டு
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
- நீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் பட்டையைப் போட்டு இறக்கி, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
- 10 நிமிடம் கழித்து, நீரை வடிகட்டி, அத்துடன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
-
இந்த டீயை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், உடல் எடை வேகமாக குறையும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.