பச்சை முட்டை குடித்தால் என்ன நடக்கும்?
முட்டையில் அதிகளவிலான சத்துகள் நிறைந்து இருப்பதால் தவறாமல் நமது தினசரி உணவில் அதை சேர்த்துக்கொள்வோம்.
முட்டையை பெரும்பாலும் அவித்து மற்றும் பொறித்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் பூப்படைந்த பெண்கள் மற்றும் ஜிம் செல்பவர்கள் தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று முட்டையை பச்சையாக குடிப்பார்கள்.
இப்படி பச்சை முட்டை குடிப்பது நல்லதா கெட்டதா என்று ஒரு நாளாவது யோசித்து இருகின்றீர்களா? அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.
முட்டையில் உள்ள சத்துகள்
6.3 கிராம் புரோட்டீன் மற்றும் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் மேலும் மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 சத்துகளும் காணப்படுகின்றது.
பச்சையாக உண்ணலாமா?
இவ்வாறு ஒரு கேள்வியை கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும். காரணம், சமைத்த முட்டையை எடுத்துக்கொண்டால் புரோட்டீன் 90% சதவீதம் உடலிற்கு கிடைக்கும். இதுவே பச்சையாக சாப்பிட்டால் 50% சதவீத புரோட்டீன் தான் கிடைக்கும்.
இதற்கு காரணம் என்ன?
முட்டையில் சால்மோனெல்லா என்ற ஒரு கிருமி இருக்கின்றது. இந்த கிருமியானது முட்டையை சமைத்து சாப்பிடும் பொழுது இறந்து விடுகின்றது. இதுவே பச்சயைாக சாப்பிடும் போது உடலிற்குள் சென்று வயிற்றுப்போக்கு, வாந்தி என நோய் தொற்றுகளை ஏற்படுத்தும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் முட்டைளை பச்சையாக சாப்பிடுவதை முற்றாக தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |