மத்தி மீன் சாப்பிட்டால் எடை குறைக்கலாம்! இன்னும் பல நன்மைகள்
மீன் சாப்பிட்டால் உடலிற்கு பல நன்மைகள் கிடைக்கும் என கேள்விப்பட்டிருப்போம், அது சரி தான் மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
மீனில் பலவகை உள்ளது. அதிலும் மத்தி மீன் என்பது மருத்துவ குணத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
மத்தி மீனிற்கு இருக்ககூடிய சத்துகள் பற்றியும் அது சாப்பிடுவதால் எற்படும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்த்துக்கொள்வோம்.
சத்துக்கள்
100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் எராளமாகவும் காணப்படுகின்றது.
வைட்டமின் D சத்து அதிகம்.
நன்மைகள்
-
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.
-
நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.
-
இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
-
எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- முன்கழுத்து கழலை நோய்களை வராமல் தடுக்கும்.
-
குழந்தைக்கும் தாய்க்கும் நிறைவான கால்சியம் கிடைக்கும்.
-
முடி உதிர்தலை தடுக்கும்.
-
கண் பார்வையை அதிகரிக்கும்.
-
தோல் நோய் மற்றும் நரம்பு நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
-
மன அழுத்தத்தில் இருந்து வெளிவர செய்யும்.
-
ஆஸ்துமா பிரச்சினை வரவிடாமல் வைத்துக்கொள்ளும்.
-
புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.
- உடல் எடையை குறைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |