உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்போ இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்க போதும்!
இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கு முக்கிய நோய்களுள் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது.
புற்றுநோய் என்பது உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பிரிந்து சுற்றியுள்ள திசுக்களில் பரவும் போது ஏற்படும் ஒரு நோயாகும்.
இந்த புற்றுநோயால் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம்.
ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவுகளை உண்பதால் கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
தற்போது புற்றுநோயை தடுக்க கூடிய ஒரு சில உணவுகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
- ஆப்பிள் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே ஆப்பிளை அதிகம் சாப்பிட்டு வந்தால், மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
- வேர்க்கடலை எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளன. இவை பல வகையான புற்றநோய்களின் அபாயத்தைக் குறைக்கக்கூடியது. எனவே வேர்க்கடலை எண்ணெயை அன்றாட சமையலில் சேர்ப்பதோடு, முடிந்தால் வேர்க்கடலையை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.
- மாதுளையில் உள்ள கூறுகள் ஈஸ்ட்ரோஜென்களால் ஏற்படும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றது. அதோடு மாதுளை புரோஸ்ரேட் புற்றுநோய் மற்றும் இதய நோயின் அபாயத்தில் இருந்தும் பாதுகாக்கிறது.
- கேரட்டில் உள்ள பாலிஅசிட்லின் தான் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும், இதில் உள்ள கரோட்டினாய்டு அமிலம் பெண்களில் மார்பக புற்றுநோய் செல்களைத் தடுக்கிறது.
- ப்ராக்கோலியில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் காணப்படுகின்றன. கூடுதலாக இதில் பைட்டோநியூட்ரியண்டுகளும் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக, இது மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
- நற்பதமான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களை அடிக்கடி உணவில் ஒருவர் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே பெர்ரி பழங்களை உங்களின் அன்றாட உணவில் சிறிது சேர்த்து வாருங்கள்.
- டார்க் சாக்லேட்டில் 70 சதவீதம் கொக்கோ உள்ளது. மேலும் அனைத்து வகையான உலர் பழங்கள், ஒமேக-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் போன்றவையும் புற்றுநோயைத் தடுப்பதில் சிறந்தது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022