மலச்சிக்கல் பிரச்சினைக்கு வாரத்திற்கு 4 முறை இந்த காயை சமைத்து சாப்பிடுங்க
தினந்தோறும் நமது மதிய மற்றும் இரவு உணவுகளில் காய்கள் சேர்த்து சாப்பிடுவது நல்லது. காய்கள் பெரும்பாலானவை உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது. அப்படியான காய்களில் பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு காயாக வாழைக்காய் இருக்கிறது.
இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க வாழைகாய்களை அதிகம் சாப்பிடலாம்.மேலும் வாழைக்காயில் வைட்டமின் எ சத்து அதிகமாக இருப்பதால் கண் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது.
வாழைக்காயில் வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் இருப்பதால் மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான பல பிரச்சனைகளை சரி செய்கிறது.
வாழைக்காய் நம் நாட்டில் சமையலில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத காய்களில் ஒன்றாகும். வாழைக்காயானது வாழை மரத்திலிருந்து பெறப்படுகிறது. வாழை மரத்தின் இலைகள், பூக்கள், தண்டுகள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் வாழை மரம் தோட்டங்களில் மட்டுமல்லாது பெரும்பாலான வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.
வாழைக்காயில் ஸ்டார்ச் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் போன்றவை அதிகமாக உள்ளது. இந்த ஸ்டார்சானது கரையாத நார்ச்சத்தாக செயல் பட்டு, நேரடியாக ஜீரண மண்டலத்தை சென்றடைகிறது. அங்கே உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் மூலம் வரும் நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. வாழைக்காயை உணவுடன் எடுத்து கொண்டால் நூறு வயது வரை நோயின்றி வாழலாம்.
குளுகோஸின் அளவை கட்டுக்குள் வைக்க
வாரத்தில் மூன்று முறை வாழைக்காய் சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
எலும்பு பிரச்சினைக்கு
வாழைக்காயில் வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் இருப்பதால் மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான பல பிரச்சனைகளை சரி செய்கிறது. நமது உடலுக்கு ஆதாரமாக இருப்பது எலும்புகள் ஆகும். எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பது அவசியம். வாழைக்காயில் எலும்புகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புற்று நோய்
வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும்.இதனால் புற்று நோய் ஏற்படுவதில் இருந்து நம்மை காக்கிறது.
உடல் எடை குறைக்க
வாழைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைப்பதில் பேருதவி புரிகிறது. மலச்சிக்கல்
மலச்சிக்கல்
இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லது. வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து இருக்கிறது. இது குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலத்தை இலகுவாக்கி,எளிதில் வெளியேற்றி மலச்சிக்கலை போக்குகிறது.