ரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க இதை அடிக்கடி சமைத்து சாப்பிடுங்க!
குதிரைவாலி புற்கள் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது ஒருவகைப் புன்செய் பயிராகும். குதிரைவாலிக்கு புல்லுச்சாமை என்ற பெயரும் உண்டு. குதிரைவாலி ஆங்கிலத்தில் Horse-tail Millet, Barnyard Millet என்று அழைக்கபடுகிறது.
குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி. குதிரைவாலி கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன.
காலை உணவான இட்லி, தோசை, பணியாரம், ரொட்டி, பொங்கல் போன்றவற்றையும் குதிரைவாலி கொண்டு தயாரிக்கலாம். சத்துமாவாகத் தயாரித்து கஞ்சி, கூழ் காய்ச்சி பெரியவர் முதல் குழந்தைகள் என எல்லோருக்கும் ருசியாகத் தரலாம். குதிரைவாலியை வறுத்து, ஒரு பங்குக்கு ஏதாவது ஒரு பருப்பு / பயறு கால் பங்கு வறுத்துச் சேர்த்து பொடி செய்யலாம். பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை சேர்க்கலாம்.
குதிரைவாலி அரிசி சாப்பிடுவதால் பல ஆரோக்கியமான சத்துக்கள் அடங்கியுள்ளன. குதிரைவாலி அரிசியில் அதிகமான வைட்டமின் சத்துகள் அடங்கியுள்ளது எனவே விட்டமின் ஏ, விட்டமின் பி, மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியிருப்பதால் குதிரைவாலி அரிசி கண்டிப்பாக அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும்.
கர்ப்பிணி பெண்களுக்கு நீர் சத்து என்பது மிக முக்கியமான ஒன்று. எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு நீர்ச்சத்து குறைவாக இருந்தால் குதிரைவாலி அரிசியில் கஞ்சி சாப்பிட்டு வந்தால் நீர்ச்சத்து உடனே கூடி விடும். எனவே குதிரைவாலி அரிசி கர்ப்பிணி பெண்கள் தவறாமல் சாப்பிட்டு வரலாம்.
சக்கரை நோய்
உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த குதிரைவாலி அரிசி உதவுகிறது. சக்கரை நோய் இருப்பவர்கள் குதிரைவாலி அரிசி சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை
குதிரைவாலியில் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் நிறைய உள்ளன. இவை உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றும் பண்புகளை கொண்டுள்ளன.
ரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க
குதிரைவாலியில் கார்போஹைட்ரெட் மற்றும் கொழுப்பு குறைவாகவே உள்ளன. 100 கிராம் குதிரைவாலியில் வெறும் 3.6 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. இதனால், அன்றாட வாழ்க்கையில் குதிரைவாலி தொடர்ந்து உண்டு வருவதால் ஆரோக்கியமாக இதயத்தை வைத்துக் கொள்ளலாம். மேலும், இது உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது
சிறுநீர் பிரச்சினை
இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்கும். சளி, காய்ச்சல் உடலில் கபம் அதிகமாகி அதனால் அடிக்கடி
சளி, காய்ச்சலால்
அவதிப்படுவார்கள் குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.
குழந்தைகளுக்கு
குழந்தைகளுக்கு குதிரைவாலி அரிசி கஞ்சி செய்து கொடுத்தால் மிகமிக நல்லது மற்றும் அவர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிக நன்றாக இருக்கும்.