மது அருந்திய பின் இதை மறந்தும் கூட சாப்பிட வேண்டாம்! மாரடைப்பு ஏற்பட்டு உயிரே போய்விடுமாம்... உஷார்
மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
அதிலும் மது அருந்திவிட்டு சில உணவுகளை சாப்பிடவே கூடாது, அப்படி மீறினால் அது நமது உயிரையே பறித்துவிடுமாம்.
பொதுவாகவே மது அருந்துதல் தவறு என்றாலும், மது அருந்திய பின்னர் சாப்பிடும் உணவுகள் மிகவும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடியதாக இருக்க வேண்டும். மதுவும் அருந்திவிட்டு, ஜீரணமும் ஆகாவிட்டால் பாடாய் படுத்திவிடும்.
அதேபோல் மது அருந்திவிட்டு எண்ணெயில் பொறித்த உணவுகளையோ, பேக்கிங் ஐயிட்டங்களையோ சாப்பிடக்கூடாது.
மது அருந்திவிட்டு கீரை வகைகளை சாப்பிட கூடாது அதிலும் ஆல்கஹால் அருந்திவிட்டு அகத்தி கீரை சாப்பிடவே கூடாது. ஏனெனில் இதை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஏனெனில் மது அருந்தி விட்டு அகத்திக்கீரை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுமாம்.