வாரம் ஒருமுறை பாகற்காய் சமைத்து சாப்பிடுவதால் நடக்கும் அற்புதங்கள்! இதயம், சிறுநீரக வியாதிகளுக்கு இனி குட் பை
கசப்பான காய் என கூறி பாகற்காய் சாப்பிடுவதை பலரும் தவிர்த்து விடுவார்கள். ஆனால் அதில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது தெரியுமா?
பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள்
பாகற்காயில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை உடையவர்கள் இந்த காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை சரியாகும்.
வாரம் ஒருமுறை பாகற்காய் சமைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பாகற்காய் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயம் சம்பந்தமான நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
தினமும் காலையில் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு ஆறு மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை முற்றிலுமாக சரியாகும்.
பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் உணவில் அடிக்கடி பாகற்காயை சேர்த்து கொள்வது நலம் பெயர்க்கும்.