தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
பார்ப்பதற்கு ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும் கேரட்டுகளை சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
தினமும் கேரட் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
கொழுப்பைக் குறைக்க உதவும்
இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
கண்களின் ஆரோக்கியம்
கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
உடல் எடை குறைய
குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்-ல் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது.
புற்றுநோய்
புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கேரட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
சருமம்
தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாவதை காண முடியும்.