நீங்கள் சிக்கன் பிரியரா? தினமும் சிக்கன் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
அசைவப் பிரியர்களுக்கு அதிகம் பிடித்த உணவுகளில் முதன்மையானதாக சிக்கன் இருக்கிறது.
சிக்கன் புரோட்டீன் நிறைந்த சத்தான உணவுதான். இருப்பினும் அதை சாப்பிடும் விதத்தில்தான் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும். அதேபோல் என்னதான் ஆரோக்கியம் என்றாலும் தினசரி சாப்பிட்டால் அதுவும் நஞ்சுதான்.
அப்படி தினமும் சிக்கன் சாப்பிட்டால் உண்டாகும் பக்கவிளைவுகள் குறித்து காண்போம்
கொழுப்பு
சரியான முறையில் சிக்கனை உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. வறுத்த சிக்கனை நீங்கள் வழக்கமாக சாப்பிடுபவர் எனில், உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில், அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெள்ளை இறைச்சி சிவப்பு இறைச்சியைப் போலவே கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. உங்கள் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க, வேகவைத்த, சுடப்பட்ட அல்லது கிரில் செய்யப்பட்ட சிக்கனை சாப்பிடுங்கள்.
உடல் உஷ்ணம்
சிக்கன் உடலில் அதிக சூட்டை கிளப்பும் உணவாக கருதப்படுகிறது. எனவே தொடர்ச்சியாக சாப்பிடுவது உங்கள் உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கலாம். குறிப்பாக கோடை காலத்தில் சிக்கன் அதிக ஹீட்டை உண்டாக்கும்.
எடை அதிகரிப்பு
சிக்கனை தொடர்ந்து சாப்பிடுவதன் மற்றொரு பக்க விளைவு எடை அதிகரிப்பு. சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன், ஃப்ரைட் சிக்கன் மற்றும் பல சுவைகளில் அதை சாப்பிட்டாலும் எடையை அதிகரிக்கும். எனவே உடல் எடையில் அக்கறை செலுத்துபவர் எனில் சிக்கனை எப்போதாவது எடுத்துக்கொள்வது நல்லது.
சிறுநீர் பாதை தொற்று
சிக்கனின் சில வகை கோழிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது UTI தொற்றை உண்டாக்கலாம். அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜியின் ஜர்னல் எம்பியோவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஈ.கோலின் பாக்டீரியா சிக்கனில் அதிகமாக இருக்கும். அவ்வாறு சாப்பிடும் சிக்கன் ஈ.கோலினால் அதிகம் பரவியிருந்தால் அது சிறுநீர் பாதை தொற்றை உண்டாக்க வாய்ப்புள்ளது.