இந்த ஒரு பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் அடுக்கடுக்கான நன்மைகள்
சப்போட்டா பழம் சுவையானது மட்டும் கிடையாது, ஆரோக்கியமானதும் கூட! சப்போட்டாவில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
எலும்புகள் வலுவடைவதற்குச் சப்போட்டாவை விடச் சிறந்த பழம் வேறு எதுவும் இல்லை. கால்சியம், பாஸ்பரஸ் முதலிய சத்துகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ளதால் எலும்புகளின் இயல்பான வளர்ச்சிக்கு இது அதிகம் உதவுகிறது.
சப்போட்டாவில் கார்போ ஹைட்ரேட் மற்றும் இதர சத்துக்கள் சரிவிகித்தில் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது பேருதவி புரிகிறது.
மன அழுத்தம் நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் சப்போட்டா பழங்கள் உதவி புரிகின்றது.
இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மன பதட்டம்,தூக்கமின்மை முதலியவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
இரத்தத்தை உறைய வைக்கும் சக்தி இயற்கையாகவே சப்போட்டா பழத்திற்கு அதிகம் இருக்கிறது.பெரும்பாலும் கோடைக்கால நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்க சப்போட்டா பேருதவியாக இருக்கும்.