தினமும் முட்டை ஆம்லெட் சாப்பிடுபவரா? அதனால் என்ன ஆகும் தெரியுமா?
முட்டை பலரும் விரும்பி சாப்பிடும் உணவாகும். ஆம்லெட், ஆப்பாயில், ஃபுல் பாயில், கரண்டி ஆம்லெட், கலக்கி, அவித்த முட்டை, பொரியல், குழம்பு எனப் பலரின் அன்றாட மெனுவில், ஏதாவது ஒரு வகையில் இடம்பெறும் அளவுக்குத் தவிர்க்கமுடியாத ஓர் உணவாக இருக்கிறது முட்டை.
அமெரிக்காவில் உள்ள `நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் 30,000 பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியது. அதில் தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு அபாயகரமான அளவு கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வின்படி, தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கிறது அந்த ஆய்வு முடிவு. அதாவது, தினமும் ஒரு முட்டைவீதம் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 18 சதவிகிதமும், பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் 17 சதவிகிதமும் இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், தினமும் இரண்டு முட்டை சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் 34 சதவிகிதமும், இதயநோய் வருவதற்கான வாய்ப்பு 27 சதவிகிதமும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து உணவியல் நிபுணர் மோனகா கூறுகையில், ஒரு முட்டையில் ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, இ,கே, பி5, பி12, பி2, பி6 மற்றும் கால்சியம் பல்வேறு சத்துகள் இருக்கின்றன. எ
னவே, முட்டை ஓர் ஆரோக்கியமான உணவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த ஆய்வுகள் அனைத்தும் முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்துச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியே கூறுகின்றன.
அதற்காக மஞ்சள் கருவும் தூக்கி எறிய வேண்டியவை என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம். முட்டையின் மஞ்சள்கருவில் உள்ள செலினியம் புற்றுநோய் வராமல் தடுக்கும். `கோலின்' ஊட்டச்சத்து, மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவும்; ரத்த நாள நோய்களிலிருந்தும் பாதுகாக்கும்.
ஆனால், முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள அதிகப்படியான கொழுப்புதான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு அடிப்படையாகிறது. ஆனாலும் முட்டைக்கும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்குமான தொடர்பு பற்றிய விவாதம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அதேநேரத்தில் முட்டை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்பதை நிரூபிக்க இன்னும் வலுவான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.
முட்டையில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான அத்தியாவசியமான சத்துகள் இருந்தாலும், முட்டையையும் அளவாகச் சேர்த்துக்கொள்வதன் அவசியத்தையும் உணர்த்துகிறது இந்த ஆய்வு முடிவு என கூறியுள்ளார்.