இப்படி சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுமாம்...
உணவை அல்ல, சாப்பிடும் விதத்தை மாற்றுவது உடல் எடையைக் குறைக்க உதவும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்!
இப்படி சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும்
உடல் எடையைக் குறைப்பதற்காக, உணவை மாற்ற விரும்பவில்லையா? உணவை மாற்றவேண்டாம், உண்ணும் வேகத்தை மாற்றுங்கள் என்கிறார், Stanford பல்கலையில் பயின்ற உணவியல் நிபுணரான Dr Casey Means.
2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து, வேகவேகமாக சாப்பிடாமல், மெதுவாக சாப்பிடுவது உடல் எடையையும், இடுப்பைச் சுற்றி இருக்கும் சதையையும் குறைக்க உதவும் என தெரியவந்துள்ளது.
சாப்பிடும் வேகத்தைக் குறைப்பதுடன், இரவு உணவுக்குப்பின் நொறுக்குத்தீனிகளைத் தவிர்ப்பதும், தூங்குவதற்கு முந்தைய இரண்டு மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடாமல் இருப்பதும் உடல் எடையைக் குறைக்க உதவுமாம்.
ஆக, சாப்பிடும் முறையை மாற்றுவது உடல் பருமன் மீதும், உடல் நிறை குறியீட்டெண் என்னும் Body mass index (BMI) மீதும், இடுப்பின் அளவின்மீதும் நல்ல தாக்கக்தை ஏற்படுத்துகிறது என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சாப்பிடும் வேகத்தைக் குறைப்பது, உடல் குண்டாவதை தடுக்கவும் அதனுடன் தொடர்புடைய உடல் நல அபாயங்களைத் தவிர்க்கவும் நல்ல பலனளிக்கக்கூடியது என்கிறது அந்த ஆய்வு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |