ஆட்டுக்கறி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும் தெரியுமா?
ஆட்டுக்கறி பலருக்கும் பிடித்த சத்தான அசைவ உணவாகும். ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனித்துவமான சத்துக்களும் மருத்துவ குணங்களும் கொண்டதாகும்.
ஆட்டு ஈரல்
ஆட்டு ஈரல் அதிகப்படியான இரும்புச்சத்து புரதம் வைட்டமின் கே வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ஃபோலேட் போன்ற சத்துக்களை கொண்டது. இது நம் உடலில் புதிய சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை குணமாக்கும்.
ஆட்டு குடல்
இது பலரால் போட்டி என அழைக்கப்படுகிறது. செரிமானம் சார்ந்த எந்த ஒரு பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்று புண்களை குணமாக்கும் மற்றும் செரிமான உறுப்புகளை வந்து வலுவாக்கி சீராக இயங்குவதற்கும் உதவிசெய்யக்கூடியது ஆட்டு குடல்.
இருதயம்
இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் பி வைட்டமின் சி போன்ற சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய தமனிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும், இருதய பலவீனம் இதய படபடப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
ஆட்டு மூளை
ஆட்டின் மூளை மூளை மற்றும் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதற்கு உதவி செய்யும், குறிப்பாக அல்சைமர் என சொல்லக்கூடிய ஞாபக மறதி நோயை குணமாக்கும்