அடிக்கடி கொஞ்சம் பாசிப்பயறு சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
சிறுதானியவகையை சேர்ந்த பாசிப்பயறு உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கின்றது. இதில் புரத சத்து, நார்சத்து நிறைந்து காணப்படுகின்றன.
பாசிப்பயறை முளைகட்டி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்
உடல் செரிமானத்திற்கு பாசிப்பயறு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இதில் காணப்படக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலின் உணவுகளை சீக்கிரமாக செரிமானமாக உதவிகரமாக உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் காணப்படுவதால் மற்ற பயிர்களை விட எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
பாசிப்பயறை முளைகட்டி தினமும் நாம் சாப்பிட்டு வந்தால் நமது உடலில் இருக்கும் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இதுமட்டுமல்லாது இரத்த சோகை பிரச்சனையை வராமல் பார்த்து கொள்ளும்.
வீட்டு படுக்கையறையில் இந்த பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்! புற்றுநோயை உண்டாக்குமாம்
இரத்த அழுத்தத்தை சீராக்க பாசிப்பயறு முக்கிய பங்கு ஆற்றுகிறது.ஏனென்றால் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தகூடிய என்ஸைம்கள் செயலினை தடுத்து இரத்த அழுத்தத்தில் இருந்து நம்ம உடலை பாதுகாக்கிறது.
இதயத்தை பாதுகாக்க பாசிப்பயறு உணவுகள் முக்கிய பங்கினை அளிக்கிறது.ஏனென்றால் இதில் காணப்படக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடம்பில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுத்து மாரடைப்பு,பக்கவாதம் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது.
பாசிப்பயறு நோய் எதிர்ப்புசக்தியை அதிக அளவு கொடுக்கிறது.இதனால் எளிதில் தாக்கக்கூடிய நோய்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு பாசிப்பயறு நன்கு சாப்பிடுவதால் அவர்களுக்கு இரும்புசத்து,புரதசத்து,நார்சத்து அதிக அளவு கிடைக்கிறது.