ஊறுகாய் விரும்பியா நீங்கள்? அதை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள்.
ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக இல்லாதிருந்தாலும் கூட ஊறுகாய் எப்போதும் கிடைக்கிறது.
மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன் மற்றும் கோழி என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்கிறோம்.
ஊறுகாய் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மைகளும் இருக்கிறது, தீமைகளும் இருக்கிறது.
ஊறுகாய் சாப்பிடுவதன் நன்மைகள்
2018ஆம் ஆண்டில் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இயற்கையான மைக்ரோஃப்ளோராவால் உணவைக் கெடுப்பதையும் மாசுபடுத்துவதையும் தாமதப்படுத்துவதே ஊறுகாயின் கொள்கை நோக்கமாகும் என கூறப்பட்டுள்ளது.
இருந்தாலும் அதில் மசாலா, உப்பு, வினிகர், எண்ணெய் மற்றும் பிற வகையான அமிலங்கள் கூடுதலாக சேர்க்கப்படுவதால் ஊறுகாயின் சுவை மற்றும் சத்தான மதிப்பு இரண்டும் மேம்படுகின்றன.
மேலும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பழம், காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை நொதித்தல் முறையில் ஊறுகாய்களாக பயன்படுத்துவதன் மூலம் ஊறுகாயில் உள்ள லாக்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலத்தின் வளர்ச்சி ஊக்குவிக்கப்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமிலங்கள் உங்கள் குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை வளப்படுத்தவும் பலப்படுத்தவும் உதவுகின்றன.
இதன் பொருள் பாரம்பரியமாக புளித்த ஊறுகாய்யை சாப்பிடுவது செரிமானத்தை அதிகரிக்கும், மேலும் மெட்டபாலிசத்திற்கு உதவுகிறது மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
அதிக அளவு உப்பு இருப்பதால் ஊறுகாய்களில் சோடியம் நிறைந்துள்ளது. மேலும், அவற்றில் ஏராளமான எண்ணெய் உள்ளது.
உப்பு மற்றும் எண்ணெய் ஊறுகாயில் சேர்க்கப்பட்ட பொருட்களை பாதுகாக்கவும், பூஞ்சை தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும் சேர்க்கப்படுகின்றன.
ஆனால் உப்பு மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் இதயத்திற்கு மோசமானவை, உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. மேலும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும்.
அவை மிக மோசமான கொழுப்புகளாகும். டிரான்ஸ் கொழுப்பு உடலில் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அல்லது எல்.டி.எல் கொழுப்பின் அதிகரிப்புக்கு காரணமாகிறது. இது இதய நோய்கள், உடல் பருமன் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான உப்பு உடலுக்கு மோசமானது மற்றும் வீக்கம், நீர் தேக்கம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.