பெண்களே பிசிஓஎஸ் பிரச்சினையால் பெரும் அவதியா? இதை சரி செய்ய இவற்றை செய்தாலே போதும்
பாலி சிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் என்பது பெண்களின் கருப்பையில் ஏற்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் ஆகும்.
இந்த பிரச்சினை இருக்கும் பெண்களுக்கு குழந்தை பேறு என்பது கடினமான ஒன்றாக உள்ளது. இது ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும்.அதாவது பெண்களுக்கு ஆண் ஹார்மோன் ஆன ஆன்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருக்கும்.
இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய், ஆண்களைப் போலவே அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பருக்கள், உடல் பருமன் மற்றும் கருத்தரிக்க இயலாத தன்மை போன்ற பிரச்சினைகளை அவர்கள் சந்தித்து வருவது உண்டு.
இதிலிருந்து எளியமுறையில் விடுதலை பெற வேண்டும் என்றால் ஒரு சில இயற்கை விதைகளை நம் உணவில் சேர்த்து கொண்டால் போதும். இதனை விதை சுழற்சி முறை என்றழைக்கப்படும்.
விதை சுழற்சி என்பது நான்கு விதைகளை உள்ளடக்கிய ஒரு உணவுமுறை ஆகும். உங்க மாதவிடாய் சுழற்சியின் முதல் பாதியில் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனையும், இரண்டாம் பாதியில் புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனையும் கட்டுப்படுத்துவதன் மூலம் செய்யப்படும் ஒரு இயற்கை மருத்துவமாகும்.
இதன் மூலம் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களை சரி செய்தல், முகப்பருக்களை குறைத்தல், பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்), எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் கருவுறாமைக்கு சிகிச்சையளித்த, சோர்வு, வியர்வை மற்றும் மனநிலை மாற்றங்களை நிர்வகிக்க இந்த சிகிச்சை உதவுகிறது.
அந்தவகையில் இதனை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்ள வேண்டும்?
பூசணி விதைகள், ஆளி, எள் மற்றும் சூரிய காந்தி விதைகள் போன்றவை இவற்றில் அடங்கும்.
இந்த விதைகளை ஒவ்வொரு நாளும், பச்சையாகவோ அல்லது பவுடராக அரைத்து சாலட், பாஸ்தாக்கள் மற்றும் சாதத்துடன் எடுத்துக் கொண்டு வருவது பெண்களுக்கு நன்மை அளிக்கும். இருப்பினும் இந்த விதைகளை பவுடராக்கி சாப்பிடுவது அதன் ஊட்டச்சத்துக்களை எளிதாக உறிஞ்ச உடலுக்கு உதவுகிறது.
எப்படி உதவுகின்றது?
- ஆளி விதைகள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதில் பெண்ணின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாதிரியே காணப்படும் இயற்கையான பைட்டோ ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. இது ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு உதவுகிறது.
- பூசணி விதைகளில் லிக்னான்கள் என்ற சத்து காணப்படுகிறது. இவை துத்தநாகத்தின் நிறைந்த மூலமாகும். இது பெண்களின் மாதவிடாய் பிடிப்பை போக்க உதவுகிறது. அவற்றோடு பூசணி விதையில் அதிக அளவிலான இரும்புச்சத்தும் நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமையையும் கொடுக்கும்.
- சூரியகாந்தி விதைகளில் விட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகிறது. இது லிப்பிட் புரதத்தை பராமரிக்க உதவுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்கள் கருவுறுதல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- எள் விதைகளில் துத்தநாகம் என்ற சத்து அதிகளவில் காணப்படுகிறது. இது பெண்களின் உடலில் ப்ரோஜெஸ்டிரோனை உற்பத்தி செய்ய உதவுகிறது. ப்ரோஜெஸ்டிரோன் உயரும் போது அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனைத் தடுக்க உதவும் லிக்னான்களும் இதில் உள்ளன.
எப்படி பின்பற்ற வேண்டும் ?
- மாதவிடாயின் முதல் நாள் முதல் அண்ட விடுப்பு நாள் வரை 1 தேக்கரண்டி பூசணி விதைகள் மற்றும் ஆளி விதைகள் இரண்டையும் பச்சையாகவோ அல்லது பவுடராகவோ எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது மாதவிடாய் சுழற்சியின் முதல் 14 நாட்கள் இதை தொடர வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்க கருப்பையை வலுப்படுத்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவசியமாகிறது.
- இரண்டாவது கட்டத்தில் அண்டவிடுப்பு நாளிலிருந்து அடுத்த மாதவிடாய் சுழற்சியின் முதல் நாள் வரை 1 டேபிள் ஸ்பூன் எள் மற்றும் சூரிய காந்தி விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இந்த நாட்கள் மாதவிடாய் சுழற்சியின் இரண்டாவது கட்டமாகும். 15-30 நாட்களை குறிக்கும். இந்த கால கட்டத்தில் ஹார்மோன்கள் கருப்பையின் புறணி பகுதியை தடினமாக்க உதவும்.