புளிப்பான புளியை தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! இரத்த ஓட்டத்தையும் சீராக்குமே
புளிப்பு மிக்க புளியை நமது அன்றாட உணவில் சேர்க்கிறோம். நம்முடைய முன்னோர்கள் புளியை அன்றாட உணவில் வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பலரும் நினைப்போம்.
ஆனால் புளிக்குள் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பது தெரியுமா?
புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும். 100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறது.
ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளை புளி சீராக்குகிறது.
உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் புளிக்கு உள்ளது.
கால்களில் உண்டாகும் நீர்த்தேக்கம், வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு என்பதை மறவாதீர்கள்.